Sunday 1 July 2012

பத்திரிகை வரலாற்றில் முதலாவது கறுப்பு ஆசிரியர் பகுதி


பத்திரிகை வரலாற்றில் இலங்கையில் மேலும் ஒரு கறைபடிந்த நாளாக யூன் 29,2012 மற்றும் 30ம் திகதிகள் அமைந்திருக்கின்றது.குறிப்பாக யூன் முப்பதாம் திகதி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக அமைந்து விட்டது.யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவருகின்ற உதயன் பத்திரிகைமீதி பல்வேறு வகையான அழுத்தங்கள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படுவதற்கு எதிர்ப்பபு தெரிவித்து ஆசிரியர் பகுதி கறுப்பாக அச்சடிக்கப்பட்டு வெளிவந்திருக்கிறது.இதற்கு முதல் நாள் உதயன் ஆசிரியரை நீதிமன்ற அழைத்து மன்னிப்புக கேட்குமாறு நிதிபதியினாலும் மேலும் பன்னிரண்டு சட்டத்தரணிகளாலும் கட்டாயப்படுத்தப்பட்டார் என்று தெரிகிறது.




நில அபகரிப்புக்கெதிரான வழக்கிpல் நீதவான் கணேசராசா பாராளுமன்ற உறுப்பினர் சுபத்திரன் தெரிவித்ததான கருத்து ஒன்று தொடர்பாக கடுமையான விமர்வனமொன்றை வெளிப்படுத்தியிருந்தார்.அது தொடர்பாக நீதி மன்றம் ஏறி சுபத்திரன் எழுப்பிய ஆட்சேபனைக்கு நீதவான் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.இதனை உதயன் செய்தியாக பிரசுரிததிருநதது.அதன் பின்னர அவ்வாறானதொரு மன்னிப்பும் தான் கேட்கவில்லையென்று உதயன் ஆசிரியரை நீதிமன்றம் அழைத்து சத்தமிட்டு திட்டியதாகவும்.அதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு மாநகர சபை உறுப்பினர் ரெமடியஸ்.விக்னராஐh போன்ற 12 சட்டத்தரணிகள் நீதவானுக்கு சார்பாக கூக்குரலிட்டதாகவும்.மன்னிப்பு கேட்குமாறு நிதவான் ஆசரியரை வலியுறுத்தியதாகவும்,30ம் திகதிய பத்திரிகையில் மன்னிப்ப போட வேண்டும் என்று வலியுறத்தியதாகவும் அறிய முடிகிறது.இதற்கு பதிலாக அடுத்தநாள் உதயன் பத்திரிகையின் கறுப்பு மையிட்டு வெளிவந்ததாகவும் அறியமுடிகிறது.நீதவான் மன்னிப்பு கேட்டார் என்பதை நேரில் தான் பார்த்ததாகவும் கேட்டதாகவும் யாழ்ப்பாணப்பல்கலைக்கழக சட்டத்துறை விரிவுரையாளர் திரு குருபரன் தெரிவித்தார். இது தொடர்பாக ஆங்கிலப்பததிரிகையில் வெளிவந்த செய்தி.
.இதற்கு தமது எதிர்ப்பபை தெரிவிக்கும் முகமாக யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவருகின்ற பத்திரிகை இந்த நீதிமன்ற செய்தியை பிரசுரிக்க வில்லை.இருப்பினும் கட்சிசார்ந்நத பத்திரிகையும் இணையமும் இந்த செய்தியை பிரசுரித்திருந்தன.

No comments:

Post a Comment